வியாழன், 16 ஜூன், 2011


நீ கல்லூரி சிட்டாய்
கலக்கிய காலம் முதல்
கனவுலகில் உன்னோடு
கைகோர்த்து நடந்தவன்...

உன் தாவணி காற்றினில்
தென்றலை சுவாசித்தவன்...
நீ சுடிதார் துப்பட்டாவிற்கு
மாறியபோது மூச்சடைக்க
மலைத்து நின்றவன்....

கரைந்தோடிய காலங்களை
சபித்துக்கொண்டு இன்னும்
காத்திருக்கிறேன் உனக்காக....
கண்ணீர் மழை மட்டும்
கரைத்துக் கொண்டிருக்கிறது என்னை..


கல் மனம் கொண்டவளா நீ?
உன் கல் மனதை செதுக்கி
என்னுருவை படைத்து விடுகிறேன்....
காலங்கள் பல கடந்தாலும்
கனியும் என் காதல்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக