ஞாயிறு, 5 ஜூன், 2011


கொட்டும் மழை
கூரையை பிய்த்துக்கொண்டு
குடிசைக்குள் பெய்கிறது....
குளிரில் நடுங்கும் மழலைகள்,
நனையும் நாளைய உணவு பொருட்கள்....
என் வயித்தெரிச்சலுடன்
திட்டித்தீர்கிறேன் மழையையையும் கடவுளையும்.....

மழையும் தூவானமும்
நின்றபின் மழலைகள்
முகத்தில் மாசற்ற மகிழ்ச்சி...
அதே மகிழ்ச்சி எனக்குள்ளும்
வானவில்லை கண்டதும்...

நன்றியுடன் கடவுளை நினைக்கிறேன்

இன்னொரு மழைக்காலம் வரை
காத்திருக்க வேண்டும் வானவில்லை காண...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக