வியாழன், 16 ஜூன், 2011


நீ கல்லூரி சிட்டாய்
கலக்கிய காலம் முதல்
கனவுலகில் உன்னோடு
கைகோர்த்து நடந்தவன்...

உன் தாவணி காற்றினில்
தென்றலை சுவாசித்தவன்...
நீ சுடிதார் துப்பட்டாவிற்கு
மாறியபோது மூச்சடைக்க
மலைத்து நின்றவன்....

கரைந்தோடிய காலங்களை
சபித்துக்கொண்டு இன்னும்
காத்திருக்கிறேன் உனக்காக....
கண்ணீர் மழை மட்டும்
கரைத்துக் கொண்டிருக்கிறது என்னை..


கல் மனம் கொண்டவளா நீ?
உன் கல் மனதை செதுக்கி
என்னுருவை படைத்து விடுகிறேன்....
காலங்கள் பல கடந்தாலும்
கனியும் என் காதல்...

ஞாயிறு, 5 ஜூன், 2011


கொட்டும் மழை
கூரையை பிய்த்துக்கொண்டு
குடிசைக்குள் பெய்கிறது....
குளிரில் நடுங்கும் மழலைகள்,
நனையும் நாளைய உணவு பொருட்கள்....
என் வயித்தெரிச்சலுடன்
திட்டித்தீர்கிறேன் மழையையையும் கடவுளையும்.....

மழையும் தூவானமும்
நின்றபின் மழலைகள்
முகத்தில் மாசற்ற மகிழ்ச்சி...
அதே மகிழ்ச்சி எனக்குள்ளும்
வானவில்லை கண்டதும்...

நன்றியுடன் கடவுளை நினைக்கிறேன்

இன்னொரு மழைக்காலம் வரை
காத்திருக்க வேண்டும் வானவில்லை காண...

திங்கள், 23 மே, 2011

எல் கே ஜி, யு கே ஜி க்கு ஆயிரக்கணக்கில் காசை செலவழிக்கும் பெற்றோரை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. இன்ஜினியரிங், டாக்டர் படிப்புகளுக்கு ஆகும் செலவில் பாதியை ஆரம்ப கல்விக்கு செலவழிக்கின்றனர். பள்ளி படிப்புக்கும் உண்மையான வாழ்க்கைக்கும் நிச்சயமாய் தொடர்பே இல்லை. தனது குழந்தைகளை களிமண் பொம்மைகளாக நினைத்துக் கொண்டு தங்கள் எண்ணத்திற்கேற்ப பெற்றோர்கள் மாற்ற நினைக்கின்றனர். தனக்குள் இருக்கும் திறமையை ஒருவன் உணரும் போது பள்ளிக்கல்வி விலகி நிற்கிறது. 

வியாழன், 5 மே, 2011


டிஜிட்டல் பிலிம் மேகிங் பயிற்சி பட்டறை

கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம் உள்ளிட்ட அனைத்து துறைகள் சார்ந்த டிஜிட்டல் பிலிம் மேகிங் பயிற்சி பட்டறை. செய்முறை பயிற்சிகள் எளிய தமிழில்....

உணவு, தங்குமிடம் பயிற்சி கட்டணத்துடன் இணைந்தது. குறைந்த இடங்கள் மட்டுமே.... ஒவ்வொரு மாதமும்....

தொடர்புக்கு... 9659333836 , 9489831511 

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

நேர்மையான கதாநாயகர்கள்


Neh;ikahd fjhehafh;fs;

jkpof Njh;jiy kf;fs; midtUk; ghuhl;Lk;gb elj;jp Kbj;j gputPz; Fkhh; cz;ikahd fjhehafdhf jkpof ,isQh;fs; cs;sj;jpy; gjpe;J tpl;lhh;.

,d;ndhUth;-

kJiu khtl;l Ml;rpah; rfhak;. MSk; fl;rpf;F mQ;rhky; kf;fSf;F rfhakhf ele;J nfhz;lhh;. ahUf;Fk; mQ;rhj neQ;riuAk; fz;L ,th; mQ;rtpy;iy.

kdpj Neah; mg;Jy; fyhik njhlh;e;J ,th;fs; ,UtUk; ,isQh;fSf;F topfhl;baha;> fyq;fiu tpsf;fha; Kd;Nd epw;gh;.

vjph;fhy jkpofk; tsh;r;rpia Nehf;fp……..